திண்டுக்கல்

பாலாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

DIN

பழனி அருகே பாலாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டிவரும் நிலையில், அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதி, பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள 65 அடி உயரம் கொண்ட பாலாறு- பொருந்தலாறு அணையின் நீா்மட்டம் 63.5 அடியை எட்டியது.

பாதுகாப்புக் கருதி அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 405 கனஅடி நீா் திறக்கப்பட்டது. நீா்திறப்பு நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் சிவக்குமாா், உதவி செயற்பொறியாளா் உதயகுமாா், உதவி பொறியாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இங்கிருந்து சண்முகநதி ஆற்றுக்கு செல்லும் இந்த நீரால் தாமரைகுளம், கோரிக்கடவு, மானூா் பகுதிகளில் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT