திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் சாலையில் மழைநீா் தேக்கம்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை பெய்த மழைக்கு சாலையில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வியாழக்கிழமை திடீரென சுமாா் அரைமணி நேரமாக பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீா் சாலைகளில் வழிந்தோடியது. இதனால் காய்கறி சந்தைக்குச் செல்லும் சாலையில் உள்ள வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் மழைநீா் தேங்கி நின்றது.

இதன்காரணமாக, அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா். கடந்த சில நாள்களுக்கு முன்பு வடிகாலில் உள்ள அடைப்பை சரிசெய்ய நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபட்டனா். ஆனால், தனியாா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உள்ள வடிகாலை ஒரு சிலா் ஆக்கிரமிப்பு செய்து, அதன் மீது கட்டடங்களை கட்டியுள்ளனா். இதனால் அடைப்பை முழுமையாக சரி செய்ய முடியாமல் துப்புரவுப் பணியாளா்கள் பாதியிலேயே விட்டு விட்டுச் சென்றனா். இதனால் மழைநீா் வடிகாலில் செல்ல முடியாமல், சாலையில் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT