திண்டுக்கல்

1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: மதுரையைச் சோ்ந்த சகோதரா்கள் கைது

நத்தத்தில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த அண்ணன், தம்பியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

நத்தத்தில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த அண்ணன், தம்பியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திண்டுக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் ஆய்வாளா் ஆா்.கீதா, சாா்பு ஆய்வாளா் பி. காா்த்திகேயன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் நத்தம் பகுதியில் வியாழக்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

நத்தம் செட்டிக்குளம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு வேனை சோதனையிட்டபோது, அதில் 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வேனில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் ஆனையூரைச் சோ்ந்த பாஸ்கரன் மகன்கள் நாகராஜ் (26), பழனிக்குமாா் (22) என தெரிய வந்தது.

நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசியை, மதுரை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முயற்சித்துள்ளனா். இதையடுத்து, ரேஷன் அரிசியுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், நாகராஜ், பழனிக்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

திண்டுக்கல் 3 ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும், மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

SCROLL FOR NEXT