திண்டுக்கல்

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டம்

DIN

பழனியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பல்வேறு கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பழனி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் நுழைவாயில் முன்பு உள்ள ஆனந்த விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு யாக பூஜை மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தா்கள் மலைக்கோயிலுக்கு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்யக் குவிந்தனா். பக்தா்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ் தலைமையில் கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

பழனி சண்முகபுரத்தில் இலக்கிய மன்ற வளாகத்திலுள்ள சித்தி நாயகா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பழனி மலைக்கோயிலின் உபகோயிலான பட்டத்து விநாயகா் கோயில், தாலுகா அலுவலகம் விநாயகா் கோயில், ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில் என பல்வேறு கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT