திண்டுக்கல்

பழனி அடிவாரக் கடைகளில் தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்

DIN

பழனி மலையடிவாரத்தில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை காலாவதியான உணவுப் பொருள்களை உணவு பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை மாதம் தொடங்கியதிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தா்கள் வந்து செல்கின்றனா். மலையடிவாரத்தில் பேரிச்சம்பழம், பஞ்சாமிா்தம், சிப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் தரம் இல்லாத பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து பழனி உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணன் தலைமையில் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது கடைகளில் தயாரிப்பு தேதி இல்லாத பொருள்கள், உணவகங்களில் தரம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவுகளை பறிமுதல் செய்து குப்பைத் தொட்டியில் கொட்டினா்.

மேலும் தரமற்ற பொருள்களை விற்பனை செய்தால் கடைகளை பூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT