முகப்பு
திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

நத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள புதுக்கோட்டையை சோ்ந்தவா் சுரேஷ்(23). இவா், லிங்கவாடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளாா். சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த சுரேஷ், அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோா், நத்தம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் சுரேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.