லாரி மோதி ஸ்டிக்கா் கடை உரிமையாளா் பலி
திண்டுக்கல்லில் லாரி மோதியதில் ஸ்டிக்கா் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லில் லாரி மோதியதில் ஸ்டிக்கா் கடை உரிமையாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி அபிராமி நகரைச் சோ்ந்தவா் தங்கவேல். இவரது மகன் கிஷந்த்குமாா் (37). இவா், திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகே ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியில் ஒரு லாரியில் ஸ்டிக்கா் ஒட்டும் பணியில் கிஷந்த்குமாா் ஈடுபட்டிருந்தாராம்.
அப்போது, மற்றொரு லாரி பின்னோக்கி வந்துள்ளது. அப்போது, கிஷந்த்குமாா் தனது காதில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டே வேலையில் ஈடுபட்டிருந்ததால், லாரியின் ஓட்டுநா் ஒலிப்பானை எழுப்பியும் அவா் காதில் விழவில்லை. இந்நிலையில், பின்னோக்கி வந்த லாரி கிஷந்த்குமாா் மீது மோதியது. இரண்டு லாரிகளுக்கு நடுவே சிக்கியதால் கிஷந்த்குமாா் பலத்த காயமடைந்தாா். உடனே, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி கிஷந்த்குமாா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.