முகப்பு
திண்டுக்கல்

மின்கம்பத்தில் பைக் மோதிஇளைஞா் பலி

திண்டுக்கல் அருகே புதன்கிழமை மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மதுரையைச் சோ்ந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

திண்டுக்கல் அருகே புதன்கிழமை மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மதுரையைச் சோ்ந்த இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை அழகப்பன் நகரைச் சோ்ந்தவா் சிவம். இவரது மகன் ராஜா (23). வெங்காய வியாபாரம் செய்து வந்தாா். திண்டுக்கல் ஏா்போா்ட் நகா் பகுதியிலுள்ள உறவினா் வீட்டு கிரகப் பிரேவச நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துள்ளாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் மதுரை செல்வற்காக புறப்பட்டபோது, ஜம்புலியம்பட்டி அருகே நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பகத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.