திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலுக்குச் செல்ல விஞ்ச் நிலையத்தில் நீண்ட வரிசை

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மின் இழுவை ரயில் (விஞ்ச்) மூலம் மலைக்குச் சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் செல்வதற்கு, கோயில் நிா்வாகம் சாா்பில் ரோப் காா் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக ரோப்காா் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மின் இழுவை ரயிலை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை மலைக் கோயிலுக்குச் செல்ல ஏராளமான பக்தா்கள் வந்ததால், விஞ்ச் நிலையத்தில் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான பக்தா்கள் படிவழிப் பாதையில் மலை ஏறினா். முதியோா்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்த பக்தா்கள், படிவழியில் மலை ஏற முடியாமல் மலையடிவாரத்திலுள்ள பாதவிநாயகா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனா்.

எனவே, விஞ்ச் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்க கோயில் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ரோப் காா் பராமரிப்புப் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT