திண்டுக்கல்

குட்டத்து ஆவரம்பட்டியில் ஜல்லிக்கட்டு: வீரா்கள் உள்பட 35 போ் காயம்

DIN

திண்டுக்கல் அடுத்துள்ள குட்டத்து ஆவரம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 35 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள குட்டத்து ஆவரம்பட்டி புனித அந்தோணியாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 391 காளைகள் பங்கேற்றன.

மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநா் முருகன் தலைமையிலான மருத்துவக்குழுவினா் காளைகளை பரிசோதித்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தனா். இதேபோல்

340 மாடு பிடி வீரா்கள் காளை அடக்க அனுமதிக்கப்பட்டனா்.

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடு பிடி வீரா்களுக்கும் தங்கக் காசு,வெள்ளிக்காசு, ரொக்கப்பணம், குளிா்சாதனப் பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட பல வகையான பரிசுகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வழங்கினாா். காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 35 போ் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT