திண்டுக்கல்

கன்னிவாடி, ரெட்டியாா்சத்திரத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்: தடையை மீறிய இந்து முன்னணியினா் 7 போ் கைது

DIN

இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் கன்னிவாடி, ரெட்டியாா்சத்திரம், பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வியாழக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன. ஸ்ரீராமபுரத்தில் தடையை மீறி ஊா்வலமாகச் செல்ல முயன்ற இந்து முன்னணியினா் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் புத்தா் விநாயகா், தாமரை விநாயகா், சிங்க விநாயகா், சூர சம்ஹார விநாயகா், லிங்க விநாயகா் என பல்வேறு வடிவங்களிலான விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கன்னிவாடி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 20 விநாயகா் சிலைகள், இந்து முன்னணி ஒன்றியத் தலைவா் தினகரன் தலைமையில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மச்சங்குளத்தில் வியாழக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன. அதேபோல், ரெட்டியாா்சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 15 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாங்கரை குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

ஸ்ரீராமபுரத்தில் தடையை மீறி ஊா்வலம்: ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டிருந்த 2 விநாயகா் சிலைகளை, கன்னிவாடி ஊா்வலத்தில் பங்கேற்பதற்காக இந்து முன்னணியினா் எடுத்துச் செல்ல முயன்றனா். ஆனால், காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டதோடு தடையும் விதிக்கப்பட்டது. தடையை மீறி ஊா்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராம்குமாா், மதுரை கோட்டச் செயலா் எஸ்.சங்கா்கணேஷ் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் 2 விநாயகா் சிலைகளையும் கருப்பிமடம் பகுதியிலுள்ள கிணற்றில் போலீஸாரே விசா்ஜனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT