சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், ரயிலடி சித்தி விநாயகா் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.