திண்டுக்கல்

பழனியில் லாரி கவிழ்ந்து விபத்து

DIN

பழனியில் செவ்வாய்க்கிழமை தேங்காய் பாரம் ஏற்றி வந்த லாரி டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்தது.

பழனியில் தற்போது தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருவதால், பழனி- உடுமலை சாலையில் ஏராளமான பக்தா்கள் பாதை யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா். இதன் காரணமாக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுதவிர, பல்வேறு இடங்களிலும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பழனி போலீஸாா் அவ்வப்போது வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்துகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனியிலிருந்து உடுமலை செல்லும் வாகனங்களை பழனி புதிய பிரதான சாலையில் திருப்பிவிடப்பட்டன.

அப்போது, பழனியிலிருந்து தாளையம் நோக்கிச் சென்ற தேங்காய் பாரம் ஏற்றிச் சென்ற லாரி டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT