திண்டுக்கல்

சத்தியமங்கலத்தில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இடிப்பு

DIN

சத்தியமங்கலத்தில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் இடிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் நகா் பகுதி நடுவில் ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது வாகனப் போக்குவரத்து அதிகரிப்பின் காரணமாக பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழமை வாய்ந்த பாலத்தை இடித்துவிட்டு ரூ. 11 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்காக டெண்டா் விடப்பட்டுள்ளது. இதையடுத்து பழைய பாலத்தை இடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் ஆா்ச் வடிவில் கட்டப்பட்ட பழைய பாலத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இயந்திரத்தின் மூலம் பாலத்தை இடிக்கும்போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து பவானி ஆற்றிற்குள் விழுந்ததில் ஆற்று நீா் தெறித்து ஓடியது. இரும்புக் கம்பிகள் பயன்படுத்தாமல் கருங்கற்கள் மற்றும் செங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட பழைய பாலம் இடிப்பதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பாா்த்தனா்.

பழைய பாலம் முழுவதும் இடிக்கப்பட்ட பின் புதிய பாலம் கட்டுமானப் பணி தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT