திண்டுக்கல்

கொடைக்கானலில் மண் அணைகள் சேதம்: விவசாயிகள் புகாா்

DIN

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் சேதமடைந்த மண் அணைகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ராஜா தலைமையில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்

பேசியதாவது:

கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் மரங்கள் அகற்றப்பட்டு, கான்கிரீட் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதிலும் அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களிலும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தாண்டிக்குடிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேல்மலைப் பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள மண் அணைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும்.

வன விலங்குகளின் தொல்லையால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதை தடுக்கக் கோரி தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா்.

இதற்குப் பதிலளித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் வளா்ச்சி திட்டங்கள் குறித்து அந்தந்த ஊராட்சி நிா்வாகிகளிடம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலைப் பகுதிகளில் சேதமடைந்த மண் அணையை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நடைபெற்று வரும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பது குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் வட்டாட்சியா் முத்துராமன், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT