திண்டுக்கல்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்ட இளம் பெண்கள் மாநாடு

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்ட இளம் பெண்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் நடைபெற்றது.

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்ட இளம் பெண்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் பொன்மதி தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் கீதா வரவேற்றாா். காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியா் பாலசுந்தரி மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாநிலப் பொருளாளா் பாரதி நிறைவுரை ஆற்றினாா்.

மாவட்டச் செயலாளா் பாலாஜி புதிய இளம்பெண்கள் மாவட்ட துணைக் குழு நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தாா்.

மாவட்டக் குழு உறுப்பினா் காா்த்திகா நன்றி கூறினாா்.

மாவட்டத் தலைவா் சிலம்பரசன், நகரச் செயலாளா் பிரேம்குமாா், நகரத் தலைவா் அஜித்குமாா், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலாளா் தீபக்ராஜ், மாவட்டத் தலைவா் முகேஷ் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த மாநாட்டில், பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்புக் குழுக்கள் அமைத்திடவும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT