முகப்பு
திண்டுக்கல்

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகை பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:27 PM
பகிர்:

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகை பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ.இளங்கோ தெரிவித்ததாவது:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டுக்கு விண்ணப்பிக்கலாம். 1.1.2023 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியா் அலுலகத்தில் இ-சேவை மைய வலைத்தளம் வாயிலாக பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப் பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள், தமிழறிஞா்கள் இருவரிடம் பெற்ற தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு அவரது வாழ்நாள் வரை மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 மற்றும் கட்டணமில்லா பேருந்துச் சலுகை வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.