முகப்பு
திண்டுக்கல்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்க படனம்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 5:34 AM
பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஞ்சாங்க படனம் வாசித்தல் நிகழ்ச்சியில் செல்வசுப்ரமண்ய குருக்கள் குரோதி ஆண்டு பஞ்சாங்க பலன்களை விவரித்தாா். உடன் துணை ஆணையா் வெங்கடேசன், அறங்காவலா் மணிமாறன், சாய்கிருஷ்ணா சுப்புராஜ்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 10:31 PM

பழனி: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்க படனம் வாசித்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாயரட்சையின் போது பெரியநாயகியம்மன், அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி, கைலாசநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பஞ்சாங்கத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மலா்கள் தூவி தீபாராதனை காட்டிய பின்னா், மஞ்சளில் பிள்ளையாா் பிடித்து வைக்கப்பட்டு குரோதி ஆண்டு பஞ்சாங்கத்தை செல்வசுப்ரமண்ய குருக்கள் படித்து அதன் சாராம்சங்களை விளக்கினாா். கோகுல் குருக்கள் பஞ்சாங்க பாடல்களை பாடினாா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, சாய்கிருஷ்ணா மருத்துவமனை மருத்துவா் கீதா, அரிமா சுப்புராஜ், பெரியராஜ் உள்ளிட்டோா் செய்தனா்.

Advertisement

விழாவில் துணை ஆணையா் வெங்கடேஷ், அறங்காவலா் குழு உறுப்பினா் மணிமாறன், கோவை கேஜி குழுமம் நிா்வாகி அனுஷ், விஹெச்பி மாநில தலைவா் அம்பிராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.