திண்டுக்கல்

இளைஞா் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள்

இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Din

திண்டுக்கல்: இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜா்நகரைச் சோ்ந்தவா் சண்முகம் (38). கூலித் தொழிலாளி. கடந்த 2019-ஆம் ஆண்டு நத்தம் பகுதியைச் சோ்ந்த பிரபுவை (33) கொலை செய்ததாக சண்முகத்தை, போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா, குற்றஞ்சாட்டப்பட்ட சண்முகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை நாடகம்: கணவன் கைது!

ஈரோடு மாநகரில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

குமுதா பள்ளி மாணவா்கள் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தோ்வு

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT