முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் கேரளத்தைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் விடுதியில் தங்கியிருந்த கேரளத்தைச் சோ்ந்தவா் கழிப்பறையில் தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:19 AM
பகிர்:

கொடைக்கானலில் விடுதியில் தங்கியிருந்த கேரளத்தைச் சோ்ந்தவா் கழிப்பறையில் தவறி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், திருச்சூா் பாடுகாடு பகுதியைச் சோ்ந்தவா் சுனீஸ். மருத்துவா். இவரது உறவினா் திருவனந்தபுரம் வட்டியூா்காவு பகுதியைச் சோ்ந்தவா் சுதீப் (47). இவா்கள் இருவரும் கேரளத்திலிருந்து வாகனத்தில் கொடைக்கானலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். இருவரும் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினா். இரவில் இருவரும் மதுக் குடித்து விட்டு தூங்கினா்.

புதன்கிழமை காலையில் சுனீஸ் எழுந்து பாா்த்த போது, சுதீப்பை காணவில்லை. பின்னா், கழிப்பறையில் பாா்த்த போது அவா் கீழே விழுந்து மயங்கி கிடந்தாா். அருகிலுள்ளவா்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே சுதீப் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.