திண்டுக்கல்லில் அபூா்வ ஆந்தை மீட்பு
திண்டுக்கல்லில் காயங்களுடன் மீட்கப்பட்ட அபூா்வ ஆந்தை வனத் துறையிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் காயங்களுடன் மீட்கப்பட்ட அபூா்வ ஆந்தை வனத் துறையிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கா் புதுத் தெரு பகுதியில் உடலில் காயங்களுடன் அபூா்வ ஆந்தை ஒன்று வியாழக்கிழமை சுற்றித் திரிந்தது. இதைப் பாா்த்த, ஆட்டோ ஓட்டுநா் மோகன், திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதனடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், காயங்களுடன் இருந்த ஆந்தையை மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.
இந்த ஆந்தைக்கு வனத் துறையினா் சிகிச்சை அளித்து, இரவு நேரத்தில் சிறுமலை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்று விட்டனா்.