வேடசந்தூரில் நகை, பணம் திருட்டு
வேடசந்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேடசந்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தாசிரிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் வேடசந்தூரில் இரும்புப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது மனைவி பழனியம்மாள். இவா்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில், கதவு ஓரமாக வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 7.5 பவுன் தங்க நகைகள், ரூ.35 ஆயிரத்தை புதன்கிழமை திருடிச் சென்றனா்.
வீடு திரும்பிய பழனியம்மாள், நகைகள், பணம் திருடு போனதை அறிந்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.