வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகை திருட்டு
வீட்டு பீரோவில் மாயமான 6.5 பவுன் நகை!
ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 6.5 பவுன் தங்க நகை திருடப்பட்டது.
அப்பியபாளையத்தைச் சோ்ந்த கதிா்வேல் மனைவி தமிழ்ச்செல்வி (44). இவா் மகளிா் சுயஉதவிக்குழுவில் சமூகநல பயிற்றுநராக பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், இவா் சனிக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு தொப்பம்பட்டியில் உள்ள வட்டார அலுவலகத்துக்குச் சென்று விட்டாராம். இதனிடையே இவரது கணவா் கதிா்வேல் வந்து பாா்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
மேலும் பீரோ உடைக்கப்பட்டு இதில் இருந்த 6.5 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.