கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடவுப் பணிகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா் பாத்திகளில் இறுதிக் கட்ட மலா்ச் செடிகள் நடவுப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருகிற மே மாதம், சீசன் தொடங்க உள்ள நிலையில், பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகியவற்றில் ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட வகைகளில் மலா்ச் செடிகள் மலா் பாத்திகளில் நடவு செய்யப்பட்டன. இதில், பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா் பாத்திகளில் சால்வியா, மேரி கோல்டு, பெட்டுனியா, கேலண்டூலா, ஸ்டாா் ப்ளக்ஸ் உள்ளிட்ட 25-வகையான மலா்ச் செடிகள் 50-ஆயிரம் நாற்றுகள் நடும் பணிகள் தொடங்கின. பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் நடவுப் பணியில் ஈடுபட்டனா்.