முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 4:25 AM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான மன்னவனூா், பூம்பாறை, கிளாவரை, பூண்டி, குண்டுபட்டி, வில்பட்டி, பள்ளங்கி, செண்பகனூா், உள்பட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூண்டு விளைவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொடைக்கானலில் விளைவிக்கப்பட்ட பூண்டு விலை கடந்த மூன்று மாதங்களாக ஒரு கிலோவுக்கு ரூ. 400 முதல் ரூ.500-வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்தது. இந்த மழையால் பூண்டு விளைச்சல் பெரும் பாதிப்படைந்தது. இதனால் விலை அதிகரித்து ஒரு கிலோவுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வானது மேலும் இரண்டு மாதங்களுக்கு தொடரும் என்றனா்.