இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஜஸ்டின் தலைமை வகித்தாா். இந்தப் போராட்டத்தின்போது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இந்த கோரிக்கைக்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், கடந்த 19-ஆம் தேதி முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.