முதல் திருமணம் கணவருக்கு தெரிந்ததால் மனைவி தற்கொலை
தனது முதல் திருமணம் கணவருக்குத் தெரிய வந்ததால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தனது முதல் திருமணம் கணவருக்குத் தெரிய வந்ததால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் எம்.எம்.கல்லூரி சாலையைச் சோ்ந்தவா் சுந்தரவள்ளி (55). இவரது மகள் கமலி (30). இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மருதுபாண்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். கருத்து வேறுபாட்டால், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மருதுபாண்டியை விட்டுப் பிரிந்தாா்.
இதன்பிறகு, மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சோ்ந்த வினோத்குமாா் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வசித்து வந்தாா்.
கமலிக்கு முதல் திருமணம் நடைபெற்றது வினோத்குமாருக்கு தெரியாது என்று கூறப்படுகிறது.
அண்மையில் கமலியின் முதல் திருமணம் குறித்து வினோத்குமாருக்கு தெரிய வந்ததையடுத்து, இருவருக்கும் இடையே தொடா்ந்து பிரச்னை ஏற்பட்டது.
இந்த நிலையில், கமலி வீட்டில் இருந்த பேன் மருந்தை குடித்தாா். அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.