முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் கரடி நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

கரடி நடமாட்டம்: கொடைக்கானல் விவசாயிகள் அச்சத்தில்

Updated On : 1 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கும்பூா்வயல் பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா்,

கும்பம்பட்டி, கும்பூா்வயல் உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், கேரட், உருளை, பூண்டு போன்ற பயிா்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கும்பூா்வயல் பகுதிகளில் திங்கள்கிழமை சுற்றித் திரிந்த கரடி விளைநிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளைச் சேதப்படுத்தியது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனா். அடிக்கடி இந்தப் பகுதிகளுக்குள் கரடி வருவதால், அதை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.