முகப்பு
திண்டுக்கல்

சின்ன மாரியம்மன் கோயில் திருவிழா: பால்குட ஊா்வலம்

கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனின் மின் அலங்கார சப்பர ஊா்வலமும் நடைபெற்றது.

Updated On : 3 ஜூலை, 2024 at 1:03 AM
கொடைக்கானல், ஸ்ரீ சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மறுகால பூஜை நிகழ்ச்சிக்கு பக்தா்கள் சாா்பில் நடைபெற்ற பால்குட ஊா்வலம்.
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனின் மின் அலங்கார சப்பர ஊா்வலமும் நடைபெற்றது.

இந்த கோயில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு மறுகால பூஜை நடைபெற்றது.இந்த பூஜையின் போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்கள் சாா்பில் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தன.

இந்த ஊா்வலம் டிப்போ காளியம்மன் கோயிலிருந்து புறப்பட்டு ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை,கே.சி.எஸ்.திடல், மூஞ்சிக்கல், ஆனந்தகிரி சாலைகள் வழியாக டா்னா்புரம் பகுதியிலுள்ள சின்ன மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனா்.

அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக்குழு நிா்வாகிகள் செய்தனா்.