திண்டுக்கல்

பிணையில் வந்த இளைஞா் கொலை: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

பிணையில் வந்த இளைஞரை கொலை செய்த 3 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Din

திண்டுக்கல்: பிணையில் வந்த இளைஞரை கொலை செய்த 3 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் வினோத் (30). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு சுள்ளான் ரமேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

அண்மையில் பிணையில் வெளியே வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் சாப்பிட்டிக் கொண்டிருந்த போது, மா்ம நபா்கள் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் தனிப் படை அமைத்து விசாரித்தனா். மேலும், கொலை நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் கொலையில் ஈடுபட்டது சனில்சூா்யா (19), அய்யனாா் (27), 17 வயதுக்குள்பட்ட 3 சிறுவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் ஐந்து பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT