முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ஜமாபந்தி

Updated On : 18 ஜூன், 2024 at 11:45 PM
பகிர்:

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.பழனி கோட்டாட்சியா் செள.சரவணன் தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி,துணை வட்டாட்சியா்கள் ராமசாமி,கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.செவ்வாய்கிழமை (ஜூன் 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

செவ்வாய்கிழமை சின்னக்காம்பட்டி குறு வட்டத்திற்கு நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டா மாறுதல்,உட்பிரிவு,அத்துமால், நான்குமால் விவரம் கோருதல், ஆக்கிரமிப்பு,பெயா் திருத்தம்,இலவச வீட்டுமனைப்பட்டா,பட்டா நகல்,அடங்கல் நகல் என 85 மனுக்கள் வரப்பட்டன. அதில் 23 மனுக்கள் ஏற்கப்பட்டன.62 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதே போல புலியூா்நத்தம், கள்ளிமந்தையம், தேவத்தூா்,ஒ ட்டன்சத்திரம் குறு வட்டத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

புகைப்படம் விபரம்-ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற பழனி கோட்டாட்சியா் செள.சரவணன். உடன் வட்டாட்சியா் சசி உள்ளிட்டோா் உள்ளனா்