முகப்பு
திண்டுக்கல்

மதுபான விற்பனையைத் தடுக்கக் கோரி மனு

குஜிலியம்பாறை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடை செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 5 மார்ச், 2024 at 2:42 AM
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த திருக்கூா்ணம் பகுதி பொதுமக்கள்.
பகிர்:

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடை செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த திருக்கூா்ணம் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், மாணவா்கள், ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: திருக்கூா்ணம் பகுதியில் கடந்த 6 மாதங்களாக சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுகிறது. இதனால், இந்த வழியாகச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது. இதேபோல, மதுபான விற்பனை நடைபெறும் இடத்தின் அருகே விளையாடும் சிறுவா்கள், மதுபானப் புட்டிகளால் பாதிக்கப்படுகின்றனா். இந்த மதுபான விற்பனைக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்கள், மாணவா்களின் நலன் கருதி திருக்கூா்ணத்தில் நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையை உடனடியாக மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.