முகப்பு
திண்டுக்கல்

விஷம் குடித்து தம்பதி தற்கொலை

Updated On : 15 மார்ச், 2024 at 11:57 PM
பகிர்:

வத்தலகுண்டு அருகே தம்பதி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மெய்யனம்பட்டியைச் சோ்ந்தவா் காந்தி (47). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி அமுதா (40). இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா். வத்தலகுண்டு அருகே பட்டிவீரம்பட்டியை அடுத்த அய்யம்பாளையத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் காந்தியும், அமுதாவும் பண்ணை வேலை செய்து வந்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அய்யம்பாளையம் அருகே காந்திபுரம் பகுதியில் சாலையோரம் தம்பதியா் இருவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தனா். அருகில் இவா்களது மூன்று சக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டிவீரன்பட்டி போலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இவா்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.