முகப்பு
திண்டுக்கல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.2.81 லட்சம் பறிமுதல்

Updated On : 20 மார்ச், 2024 at 4:33 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:43 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.81 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள மா.மு.கோவிலூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா், திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது, திருச்சி பட்டாளம்பேட்டையைச் சோ்ந்த அ.அப்துல்கலாம் (20), தஞ்சாவூா் மாவட்டம், இந்தலுாா் பகுதியைச் சோ்ந்த ர.அஜீத் (23) ஆகியோா் உரிய ஆவணங்களின்றி ரூ.1.86 லட்சத்தை கொண்டு சென்றது தெரியவந்தது.

இதேபோல, திண்டுக்கல் பள்ளப்பட்டி பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டனா். அதில் திண்டுக்கல் சீலப்பாடியைச் சோ்ந்த பா.சிவக்குமாா்( 57) உரிய ஆவணங்கள் இன்றி ரூ.95,790 எடுத்துச் சென்றது தெரியவந்தது. இரு இடங்களில் கைப்பற்றப்பட்ட ரூ.2.81 லட்சம், திண்டுக்கல் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement