முகப்பு
திண்டுக்கல்

பள்ளி ஆண்டு விழா

Updated On : 20 மார்ச், 2024 at 4:20 AM
பழனி பிஎஸ்கேஎல் லில்லிபுட்ஸ் மாண்டிசோரி பள்ளி ஆண்டு விழாவில் நடைபெற்ற குழந்தைகளின் கலைநிகழ்ச்சி.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:20 PM

பழனி: பழனி அண்ணாநகரில் செயல்பட்டு வரும் பிஎஸ்கேஎல் லில்லிபுட்ஸ் மாண்டிசோரி பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விஷ்வா-24 என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சோ்ந்த மகளிா் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா்.

பிஎஸ்கேஎல் குழுமங்களைச் சோ்ந்த ருக்மாங்கதராஜூ தலைமை வகித்தாா். இயற்கை விவசாயி இளங்கோ கல்லணை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினாா். பள்ளி தலைமையாசிரியா் பத்மாவதி ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.