முகப்பு
திண்டுக்கல்

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை

Updated On : 22 மார்ச், 2024 at 11:28 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 7:37 PM

திண்டுக்கல், மாா்ச் 22: சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில், இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் பசுபதிராஜா (29). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் அம்மையநாயக்கனூா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பசுபதிராஜாவை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு, திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி. சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பசுபதிராஜாவுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.