முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள்

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடை விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற்ற, பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெற்றது. இதையடுத்து, கோடை விழாவை முன்னிட்டு, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜவஹா் சிறுவா் மன்றம் வழங்கிய பரத நாட்டியம், கம்பம், திண்டுக்கல் தனியாா் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற கிராமிய நடனம், பல்சுவை நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகளை கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.