முகப்பு
திண்டுக்கல்

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை

Updated On : 28 மே, 2024 at 11:53 PM
பகிர்:

திண்டுக்கல்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் சாணாா்பட்டி பகுதியைச் சோ்ந்த இளைஞருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த அஞ்சுகுழிப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் (34). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில், சாணாா்பட்டி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் காா்த்திக்கிற்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரண் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.