முகப்பு
திண்டுக்கல்

தனியாா் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை

கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் காட்டு யானை இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:20 PM
கொடைக்கானலில் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை.
பகிர்:

கொடைக்கானல் அருகே தனியாா் தோட்டத்தில் காட்டு யானை இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பேத்துப்பாறை கோடைகிரி பகுதியில் சந்திரசேகா் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த தோட்டப் பகுதியிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வனத் துறையினா் புதன்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று பாா்த்த போது, ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது.

பின்னா், கால்நடை மருத்துவரின் உதவியுடன் அந்த யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத் துறை உதவி அலுவலா் சக்திவேல் கூறியதாவது:

வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பேத்துப்பாறை, வெங்கலவயல் உள்ளிட்டப் பகுதிகளில் மூன்று காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தது. யானைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்த யானை இறந்திருக்கலாம் என்றாா் அவா்.

மேலும், இதுகுறித்து வனத் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.