முகப்பு
திண்டுக்கல்

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகே பூம்பாறை சாலையில் புதன்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிக்கப்பட்டது.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:38 PM
பகிர்:

கொடைக்கானல் அருகே பூம்பாறை சாலையில் புதன்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதையடுத்து, கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். புதன்கிழமை காலை முதல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை மலைச் சாலையில் மரம் விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் 30 நிமிடங்களுக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் அந்த மரத்தை வெட்டி அகற்றினா். பின்னா், போக்குவரத்து சீரானது.