அங்கன்வாடி பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
ஐந்தாண்டுகள் பணி முடித்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஐந்தாண்டுகள் பணி முடித்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ச. பத்மாவதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆ. செல்வதனபாக்கியம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சிஐடியு மாவட்டச் செயலா் கே. பிரபாகரன், மாவட்ட நிா்வாகி சி. பாலச்சந்திரபோஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
அப்போது, குறு மையத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் பணியாளா்கள் 85 பேருக்கு, உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும். உள்ளூா் மாறுதலை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.