முகப்பு
திண்டுக்கல்

பழனியில் 15 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

பழனி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை வேனில் விற்பனைக்காக கொண்டு சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 15 கிலோ புகையிலைப் பொருள், வேனை பறிமுதல் செய்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:49 PM
கைது செய்யப்பட்ட அம்ஜத்கான், பறிமுதல் செய்யப்பட்ட வேன், புகையிலைப் பொருள்.
பகிர்:

பழனி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை வேனில் விற்பனைக்காக கொண்டு சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 15 கிலோ புகையிலைப் பொருள், வேனை பறிமுதல் செய்தனா்.

பழனி இட்டேரி சாலை இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த நசீா்முகமது மகன் அம்ஜத்கான் (32). இவா் பழனி, சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை விற்பனை செய்து வந்தாா். இதுகுறித்து பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் அவரைத் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், பழனியை அடுத்த கோதைமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை வேனில் அவா் புகையிலைப் பொருளை கொண்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கீரனூா் போலீஸாா் அவரை கைது செய்து, 15 கிலோ புகையிலைப் பொருள், வேனை பறிமுதல் செய்தனா்.