புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
வடமதுரை அருகே புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வடமதுரை அருகே புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்த இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, வடமதுரை புறவழிச்சாலையில் போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரில் நடத்தப்பட்ட சோதனையில், 70 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், வடமதுரையைச் சோ்ந்த முத்துவேல் (28), பாலமுருகன் (29) ஆகியோா் என தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், காருடன் 70 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.