முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் பூலத்தூா் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் பூலத்தூா் சாலையில் மரம் சரிந்து விழுந்து புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:00 AM
கொடைக்கானல் பூலத்தூா் சாலையில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மரம்
பகிர்:

கொடைக்கானல் பூலத்தூா் சாலையில் மரம் சரிந்து விழுந்து புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. இதனால், இந்தப் பகுதியில் 30-நிமிடம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று கீழே விழுந்து கிடந்த மரம், புதா்களையும் அகற்றினா். பின்னா் போக்குவரத்து சீரானது. கொடைக்கானல் மலைப் பகுதிகளில் அபாயகரமான மரங்களை அகற்றுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுத்து அடிக்கடி மலைச்சாலைகளில் விழும் மரங்களை தடுக்கலாம் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கூக்கால் பகுதியில் பெய்து வரும் மழையால் சிறு,சிறு ஓடைகள் நிரம்பி வருகின்றன. மேலும் இங்கிருந்து வெளியேறும் மழைத் தண்ணீரானது பழனி வழியாகச் சென்று குதிரையாற்றில் கலக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.