முகப்பு
திண்டுக்கல்

நான்கு வழிச் சாலைப் பணிக்கு தென்னைகளை அகற்ற எதிா்ப்பு: 25 போ் கைது

கன்னிவாடி அடுத்த, தருமத்துப்பட்டி அருகே, புதிய நான்கு வழி சாலை அமைப்பதற்காக, தென்னை மரங்களை வியாழக்கிழமை அகற்றினா். அதனை தடுத்த விவசாயிகள் பெண்கள் உட்பட 25 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 6:46 PM
பகிர்:

கன்னிவாடி அடுத்த, தருமத்துப்பட்டி அருகே, புதிய நான்கு வழி சாலை அமைப்பதற்காக, தென்னை மரங்களை வியாழக்கிழமை அகற்றினா். அதனை தடுத்த விவசாயிகள் பெண்கள் உட்பட 25 போ் கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த தருமத்துபட்டியில் இருந்து கோம்பை செல்லும் வழியில், தருமத்துப்பட்டி உட்பட 10 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட பாறை கோட்டை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பூசாரியாக தருமத்துப்பட்டியைச் சோ்ந்த நல்லால் என்பவா் உள்ளாா்.

இந்த நிலையில், இந்தக் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 6 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் நல்லால், இவரது வாரிசுகளான சக்திவேல், சுப்புராஜ், சின்னையா ஆகியோா் பயன்படுத்தி வருகின்றனா். இவா்களிடம் செப்புப் பட்டயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலத்தில், சுமாா் 35 சென்ட் பரப்பளவில் தென்னை மரங்கள் வைத்துள்ளனா். இதேபோல, இந்த தோட்டத்து பகுதியில் நல்லால் வாரிசுகள் 6 வீடுகள் கட்டி அங்கு சுமாா் 40 போ் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து செம்பட்டி வழியாக ஜெ.மெட்டூா் வரை புதிய நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு சுமாா் 35 சென்ட் நிலத்தில் உள்ள தென்னை மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சென்ற போது, தங்களிடம் செப்பு பட்டா வைத்துள்ளதாகவும், தென்னை மரம், அந்த நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என நல்லால் வாரிசுகள் கூறி வருகின்றனா்.

இதுகுறித்து நல்லால் வாரிசுகள் மாவட்ட ஆட்சியா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனா். ஆனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தென்னை மரம் வைத்துள்ள நிலம் இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான நிலம் எனவும், திட்டமிட்டபடி தென்னை மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுத்தனா். அதன்படி வியாழக்கிழமை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் அங்கு சென்று சுமாா் 100-க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தென்னை மரங்களை அகற்ற முயன்றனா். அதனை நல்லால் வாரிசுகள் மற்றும் அவரது உறவினா்கள் விவசாய சங்கத்தினா் தடுத்தனா். ஆனால், போலீசாா் வீட்டுக்குள் இருந்த 5 பெண்கள் உட்பட 25 பேரை குண்டுக்கட்டாகத் தூக்கி இழுத்து கைது செய்து, தருமத்துப்பட்டியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

மேலும், உறவினா்கள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகளுடன் பந்தல் அமைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த விவசாயிகளை அப்புறப்படுத்தினா். உண்ணாவிரத பந்தலை ஜேசிபி இயந்திரம் மூலம் போலீசாா் அகற்றினா். திட்டமிட்டபடி சுமாா் 35 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தனா். அப்போது, ஒரு தென்னை மரம் விவசாய சங்க நிா்வாகி காரின் மீது விழுந்து காா் சேதம் அடைந்தது. இரண்டு வீடுகளையும் அகற்றினா். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →