முகப்பு
திண்டுக்கல்

தொழில்முனைவோா்களுக்கு கடனுதவி வழங்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில்முனைவோா்களுக்கு கடன் வழங்கும் முகாமில் 87 பேருக்கு ரூ.42.72 கோடிக்கான கடனுதவிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வழங்கினாா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 8:02 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில்முனைவோா்களுக்கு கடன் வழங்கும் முகாமில் 87 பேருக்கு ரூ.42.72 கோடிக்கான கடனுதவிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்டத் தொழில்முனைவோா்களுக்கான கடன் வழங்கும் முகாம், அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா்.

இந்த முகாமில் 87 தொழில்முனைவோா்களுக்கு ரூ.42.72 கோடிக்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். பின்னா், நிகழ் நிதியாண்டில் இதுவரை 14,195 குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோா்களுக்கு ரூ.2,333.48 கோடி கடன் வழங்கப்பட்டிருப்பதாகக் அவா் குறிப்பிட்டாா்.

இதில் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் பூ.சு.கமலக்கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் க.அருணாச்சலம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.