திண்டுக்கல்

காட்டுப் பன்றி வேட்டை: இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

சத்திரப்பட்டியை அடுத்த கோம்பைப்பட்டியில் காட்டுப் பன்றிகளை இருவா் வேட்டையாடுவதாக ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் ராஜா தலைமையிலான வனத் துறையினா் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிந்தலவாடம்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (55) தனக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக மின் கம்பி அமைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, ரவிச்சந்திரன், இவருக்கு உடந்தையாக இருந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (25) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து வேட்டையாடிய காட்டுப்பன்றி, 4 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT