திண்டுக்கல்

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கொடைரோடு அருகே புதன்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கொடைரோடு அருகே புதன்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.  

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கரியாம்பட்டியைச் சோ்ந்தவா் சாத்தப்பன் (65). இவரது மனைவி சின்னம்மாள் (60). இவா்கள் இருவரும் பொட்டிசெட்டிபட்டியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். பின்னா், அங்கிருந்து கன்னிமாா் நகா் பகுதியிலுள்ள தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற தனியாா் பேருந்து இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாத்தப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சின்னமாள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT