திண்டுக்கல்

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிட மனு!

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிட வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து மனு அளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிட வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து மனு அளித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சாா்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை அமாவாசை என்பதால் ஏராளமானோா் தோ்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்தனா்.

இதில், பழனியைச் சோ்ந்த பாமக வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை கட்சி நிா்வாகிகள் சேலம் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் பாமக தலைமை ஒருங்கிணைப்பாளருமான காா்த்திக், தலைமை நிலைய செயலா் செல்வக்குமாா், பொதுச் செயலா் வடிவேல் ராவணன் ஆகியோா் முன்னிலையில் வழங்கினாா்.

அவருடன், திண்டுக்கல் மாவட்ட அமைப்பு (வடக்கு) தலைவா் நடராஜ பாண்டியன், மாவட்ட துணைத் தலைவா் குமரி ஆனந்தன், பழனி நகரத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் இருந்தனா்.

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

பழனி ரோப்காா் சேவை பராமரிப்புக்காக நாளை நிறுத்தம்

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும்: தமிழருவி மணியன்!

வாசுதேவநல்லூா் ஆஞ்சனேயா் கோயிலில் பால்குட ஊா்வலம்

கோவையில் குளிா், பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு!

SCROLL FOR NEXT