பெரியூா்-குரங்குப் பாறை பகுதியில் மரம் விழுந்ததில் சேதமடைந்த காா் 
திண்டுக்கல்

கொடைக்கானலில் அருகே காா் மீது மரம் விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் காா் மீது மரம் விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் சனிக்கிழமை காா் மீது மரம் விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த வெற்றிவேலுக்குச் சொந்தமான தோட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பெரியூா் ஊராட்சி பள்ளத்துக் கால்வாய் பகுதியில் உள்ளது.

இவா் தனது தோட்டத்துக்கு சனிக்கிழமை காரில் சென்றாா். இந்த காரை பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (46) ஓட்டிச் சென்றாா். இந்த காா் பள்ளத்துக் கால்வாய் - குரங்குப்பாறை பகுதியில் சென்ற போது மலைச் சாலையிலிருந்த மரம் காா் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் காா் மீது விழுந்த மரத்தை அகற்றினா். சம்பவ இடத்துக்குச் சென்ற தாண்டிக்குடி போலீஸாா், காரில் இருந்த மணிகண்டனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தாண்டிக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் பலத்த காயமடைந்த வெற்றிவேல் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT